வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இ.போ.ச சாரதி கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி நேற்று (13.06.2018) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் இ.போ.ச பேரூந்தில் கேரளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது 1 கிலோ750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒரு பையை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் இ.போ.ச (வாழைச்சேனை) சாரதியினை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த பை தனது இல்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனினும் குறித்த பையினுள் பென்ரைவ்(PENDRIVER) காணப்பட்டுள்ளது. அதனை கணணியில பரிசோதித்த சமயத்தில் குறித்த பென்ரைவ் (PENDRIVER) இல் அவரது குடும்பத்தினரின் புகைப்படம் காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் சந்தேகநபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like