காணி விடுவிப்பு தோல்வி! – மீண்டும் போராட்டத்தில் குதித்தனர் பிலக்குடியிருப்பு மக்கள் (3ஆம் இணைப்பு)

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்களின் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், அம் மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்றைய தினம் காணிகளை விடுவிப்பதாக படையினர் கூறியிருந்தபோதிலும், பெரும்பாலான காணிகள் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான காணிகளுக்குள் செல்ல முற்பட்ட மக்களை ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்காவிட்டால் காணிக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டோம் எனத் தெரிவித்த மக்கள், கேப்பாப்பிலவு விமானப் படைத்தளத்திற்கு முன்னால் மீண்டும் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 

You might also like