வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இன்று (15.062018) காலை 9.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து காலி நோக்கி இ.போ.ச பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திடமான முறையில் நின்ற நபரின் பயணப் பொதியினை சோதனையிட்ட சமயத்தில் அவரின் பயணப் பையிலிருந்து 1கிலோ 752கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் அலுத்கம பிரதேசத்தினை சேர்ந்த 46 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like