வவுனியாவில் 195மில்லியன் ரூபாவில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் பொது நிகழ்வுகள் நடைபெறும் மண்டபமாக மாற்றம்?

வவுனியாவில் 195மில்லியன் ரூபா செலவில் பிரமாண்டபமான முறையில் அமைக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தனியார் அரச பேருந்து சாரதிகளிடையே ஏற்ப்பட்ட குழப்ப நிலையினையடுத்து கடந்த மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதை காரணமாக வைத்து வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பொது நிகழ்விற்காக புதிய பேருந்து நிலையத்தினை பயன் படுத்தி வருகின்றனர்.

மக்களுக்கு நல்ல செயற்திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் புதிய பேருந்து நிலையத்தினை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்துள்ளது.

இரண்டு வருடங்களாக இரவு பகலாக அமைக்கப்பட்டு மக்கள் பணத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

இதற்காகவா புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது என்ற கேள்வியை பொதுமக்கள் தற்போது கேட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்துவதற்கு புதிய பேரூந்து நிலையம் பயன்படுத்தப்பட்ட காட்சிகளே இவை…

You might also like