வேலையில்லையா? கவலை வேண்டாம் உங்களுக்காக நாளை நாங்கள் புதுக்குடியிருப்பில்

நியூஸ்வன்னியின் ஊடக அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம், பெரெண்டினா தொழில் வள நிலையம் என்பன இணைந்து மூன்றாவது முறையாகவும் நடாத்தும் ‘முல்லை விடியல் III’ மாபெரும் தொழில் மற்றும் உயர்கல்விச்சந்தை எதிர்வரும் 16.06.2018 அன்று மு.ப 09.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

700 தொழில் வாய்ப்புக்களுடன், தொழிலாளர்கள் NVQ தர சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் நடமாடும் சேவை, உயர்கல்விகளை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பங்கள் என பல்வேறு சேவைகள் அன்றைய தினம் இளைஞர் யவதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு வருகைதரும் இளைஞர் யுவதிகளை தயார்படுத்தும் நோக்கத்துடன் எதிர்வரும் 12.06.2018 செவ்வாய்க்கிழமை மற்றும் 14.06.2018 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்திலும் 13.06.2018 புதன் கிழமை காலை 09.00 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திலும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இளைஞர், யுவதிகள் மேற்தரப்பட்ட நாட்களில் ஏதாவதொரு செயலமர்வுக்கு பங்குபற்றி மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். 021 49 27 500 அல்லது 077 4440 267 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like