ஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாதிரியார்! வவுனியாவில் சம்பவம்!!

வவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை கிறிஸ்தவ பாதிரியார்  ஒருவர் உமக்கு யார் அனுமதி வழங்கியது என கேட்டு விரட்டிய சம்பவம் நேற்று (17) இடம்பெற்றது.

வவுனியா புனித அந்தோனியார் ஆலயத்தில் சிறுவர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் நிகழ்வு நடைபெறுவதாக குறித்த பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறுவர்களின் பெற்றோர்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் ஒருவரை வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் உமக்கு யார் அனுமதி கொடுத்தது! இங்கே படம் எடுக்க! இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை வெளியே செல்லும் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த குறித்த ஊடகவியலாளர்

வவுனியாவில் பொதுவாக நடைபெறும் நிகழ்வுகள் செய்தியாளராகிய நாங்கள் பதிவிடுவது வழமை, சிறுவர்களின் நிகழ்வுகள் செய்தியாக பதிவிடும்போது அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சியடைவார்கள். அந்தவகையில் ஒரு சிறுவர் நிகழ்வை செய்தியாக பதிவிடுவதை தடை செய்த கிறிஸ்தவ பாதிரியாரின் செயலானது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார்.

You might also like