இலங்கையில் புதிதாக இரண்டாயிரம் பேருந்துக்கள்!

இலங்கையில் புதிதாக இரண்டாயிரம் பேருந்துக்களை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

”பொது மக்களுக்கு சிறப்பான போக்குவரத்துச் சேவையை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம். அரசாங்கத்தின் நிதியை பயன்படுத்தாது அதற்கு தேவாயன நடவடிக்கையை மேற்கொள்வதே நோக்கமாகும். பேருந்துகளுக்கு 500 என்ஜீன்களை பொருத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.” என்றார்.

You might also like