மூன்று வருடங்களில் நான்கு இளைஞர்களைக் கொன்ற ஸ்ரீ லங்கா பொலிஸ்!

யாழ். குடாநாட்டில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வருடங்களில் 4 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த இளைஞர் படுகொலைசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மல்லாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றொரு இளைஞர் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

You might also like