கிளிநொச்சியில் 11ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் 11 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயமுன்றலில் கடந்த 20.02.2017 அன்று குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவர்கள் நீதி வேண்டி போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் இனியும் காலம் தாமதிக்க வேண்டாம் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.

You might also like