வவுனியாவில் பெண் தலைமை தாங்கும் குடும்பத்திலுள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குடும்பத்திலுள்ள ஆண்டு 8 மற்றும் ஆண்டு 10இல் கல்வி கற்றுவரும் இரண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 02.03.2017 பிற்பகல் தமிழ் விருட்சம் அமைப்பின் அலுவலகத்தில் வைத்து தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு. எஸ். சந்திரகுமாரினால் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கணவர் காணாமல் போய் பத்து வருடங்களாகத் தேடிக்கொண்டிருக்கும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு அவர்களின் தேவை கருதியே துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like