குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா (முழுமையான படத்தொகுப்பு)

முல்லைத்தீவு குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (20.06) காலை சிறப்பான முறையில் இடம்பெற்றது .

அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில் எழுந்தருளி 9.30 மணியளவில் இரத பவனி இடம்பெற்றது .

காலை பதினொன்று முப்பதளவில் தேர் இருப்பிடத்தை வந்தடைந்ததனை தொடர்ந்து அர்ச்சனை இடம்பெற்றது .ஒன்பதாம் திருவிழா உபயகாரர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டது.

நாளை தீர்த்தோற்சவம் இடம்பெற்று நாளை மறுதினம் பூங்ககாவனத்திருவிழாவுடன் நிறைவுறவுள்ளது.

You might also like