கிளிநொச்சியில் நேற்று பெய்த மழையால் விவசாயிகள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில்  நேற்று பெய்த மழை காரணமாக, காலபோக நெற்செய்கை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்திலே ஏற்பட்ட வரட்சியான சூழல் காரணமாகவும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், காலபோக நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள், நேற்று அதிகாலையில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக அறுவடை பாதிக்கப்பட்டதுடன்  உலரவிட்டிருந்த நெல்லும் பாதிப்பை எதிர்நோக்கியது.

ஏற்கெனவே நெல்லினை உலர விடுவதற்கான தளங்கள் இல்லாமையினால், வீதிகளில் நெல்லினை உலர விட்ட விவசாயிகள், மழையினால் வீதியிலும் நெல்லினை உலர விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அறுவடை செய்தாலும் நெல்லினை உலர வைக்க முடியாமல் பச்சை நெல்லாகவே விற்பனை செய்ய வேண்டி ஏற்படும் என  தெரிவிக்கப்படுகின்றது.

You might also like