தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு!!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக செயலமர்வு நடைபெற்றுவருகின்றது.

வவுனியா மாவட்டத்திலுள்ள 04 பாடசாலைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நேற்று (01/03/2017) புதன்கிழமை வ/வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இவ் ஊடக செயலமர்விற்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிரபல ஊடகவியாளர்களான சீத்தாராமன் மற்றும் அகமட். எம். நஷீர் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடக செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் சேவை அதிகாரிகள், மாவட்ட உதவிப் பணிப்பாளர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

பாடசாலை  மாணவர்களுக்கு  ஊடகத்துறை சார்ந்த அடிப்படை அறிவை ஏற்படுத்துமுகமாக இவ் செயலமர்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like