வவுனியாவில் சிறுவர் பாடசாலை விளையாட்டு நிகழ்வில் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர் விளக்கம்.

வவுனியா புனித அந்தோனியார் சிறுவர் பாடசாலை விளையாட்டு நிகழ்வில் ஊடகவியலாளர் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் ஆலய நிர்வாக சபையினர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

புனித அந்தோனியார் ஆலயத்தில் 13-06-2018 அன்று நடைபெற்ற வருடாந்த திருவிழா நிகழ்வில் குறித்த ஊடகவியலாளர் ஆலய நிர்வாகத்திடம் எந்த அனுமதியும் பெறாமல் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்ததுடன் பங்குத்தந்தையிடம் திருவிழா குறித்த விபரங்களை கேட்டறிந்த வேளையில் ஆலயத்தின் பங்குத்தந்தை எமது ஆலயத்தில் அனுமதியின்றி எத்தகைய புகைப்படங்களையோ, தகவல் சேகரிப்புக்களையோ மேற்கொள்ளக் கூடாது என ஊடகவியலாளரிடம் தெளிவாக அறிவுறுத்தியிருந்தார்.

வவுனியா ஊடகவியலாளர் ஒருவர் ஆலய நிர்வாகத்திடம் எந்தவிதமான முன் அனுமதியும் பெறாது விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்து 16-06-2018 அன்று சிறுவர் விளையாட்டு நிகழ்வை புகைப்படம் எடுத்தபோது ஆலய நிர்வாகத்தின் தலைவராகிய பங்குத்தந்தை ஊடகவியலாளரை எதுவித முன் அனுமதியும் பெறாத காரணத்தால் வெளியேறும்படி பணித்திருந்தார்.

அறிவுறுத்தலை கவனத்தில் கொள்ளாத குறித்த ஊடகவியலாளர் முன் அனுமதி பெறாத காரணத்தால் விழையாட்டு நிகழ்வின்போது ஆலயத்தின் பங்குத்தந்தையால் விளையாட்டு நிகழ்விற்கு இடையூறு ஏற்படுத்தமால் பார்வையாளர் பகுதி செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சிறுவர் விழையாட்டு நிகழ்வின் வரவேற்பு வேளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை பதிவிட்டு ‘ஊடகவியலாளரை விரட்டிய கிறிஸ்தவ பாதிரியார்’ என்று செய்தியை பதிவிட்டிருந்தார்.

மேலும் குறித்த ஊடகவியலாளர் பாலர் பாடசாலையின் முன்னாள் பெற்றார் என்பதும், மூன்று நாட்களுக்கு முன் பங்குத்தந்தையால் அறிவுறுத்தப்பட்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்காமையே இச்சம்பவத்திற்கு காரணமாகும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புனித அந்தோனியார் ஆலயத்தின் பங்குத்தந்தையின் வாசஸ்தலத்தில்  (19)  நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில் குறித்த ஊடகவியலாளர் ஆலய நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்பதை ஒத்துக் கொண்டதுடன், ஆலயத்தின் பங்குத்தந்தையும் தான் ஊடகவியலாளரை வெளியேறுமாறு பணித்திருந்ததாக ஏற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது ஆலய நிர்வாகத்தினரும், பங்குத்தந்தையும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டனர்.

அதே போன்று சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரும் தனது தரப்பு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடலின் முடிவில் நடைபெற்ற இச்சிறு சம்பவத்தை போன்று எதிர்காலத்தில் மனம் வருந்தத்தக்க சம்பவம் இடம்பெற இடமளிக்க கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் இந்த விடயம் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளது.

You might also like