‘உணவோ ஓய்வோ இன்றி 16 மணித்தியாலம் வேலை செய்தேன்’ தன் அனுபவம் குறித்து ஒரு இலங்கைப் பெண்

வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வெளிநாட்டிற்கு தொழிலுக்குச் சென்று நாடு திரும்பிய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் குறித்த பெண் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நான் 2014ஆம் ஆண்டு சவூதி அரேபியாவிற்கு சென்று இரண்டு வருடங்களின் பின்னர் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடு திரும்பினேன் என Sandaya Priyanthi என்ற பெண் கூறியுள்ளார்.

சாப்பாடோ ஓய்வோ இன்றி தொடர்ந்து 16 மணித்தியாலம் வேலை செய்தேன் இருப்பினும் சம்பளம் பெறுவது குறித்து பெரும் சிரமப்பட்டேன் என்றும் என அந்தப் பெண் தெரிவித்துள்ளளார்.

இலங்கையிலிருந்து செல்லும் பல புலம்பெயர் தொழிலாளர்கள் துஷ்பிரயோகத்தினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

2015ஆம் ஆண்டு இவ்வாறான இன்னல்கள் தொடர்பில் 8 ஆயிரத்து 366 முறைப்பாடுகளை வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் பதிவு செய்துள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரத்தின் படி 312 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத்திற்கு சென்று தங்கள் முதலாளிகளால் தொந்தரவுக்கு உள்ளான 122 பெண்கள் கடந்த மாதம் 22ஆம் திகதி நாடு திரும்பியிருந்தனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் அவர்கள் மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வரவுள்ளனர் என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு வேலை வாய்பிற்காக செல்லும் பெண்களுக்கு வயதெல்லை தொடர்பில் கடந்த வருடம் மார்ச் மாதம் அரசாங்கம் அறிவித்திருந்தது.

சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்குச் செல்லும் பெண்களின் வயதெல்லை குறைந்தப்பட்சம் 25 வயது என்றும்,ஏனைய மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும்பெண்களின் வயதெல்லை 23 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

மத்தியக் கிழக்கு நாடுகள் தவிர்ந்து ஏனைய நாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கானகுறைந்தப் பட்ச வயதெல்லை 21 என குறிப்பிடப்பட்டுள்ளது.எனவே,வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் செல்லும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என SandayaPriyanthi வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You might also like