வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு (படங்கள் இணைப்பு)

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகைகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா ஓமந்தை அரச ஊழியர்கள் வீட்டுத்திட்ட பகுதியில் வசித்துவரும் முல்லைத்தீவு பிரதேச செயலாளர் திரு. எஸ். குணபாலனின் வீட்டில் இன்று அதிகாலை ஜன்னல் கம்பியினூடாக உட்புகுந்த திருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்ட கோவிலுக்குரிய இரண்டு இலட்சத்து ஜம்பதினாயிரம் ரூபாவினையும் மனைவியின் தாலி உட்பட 16அரை பவுண் தங்க நகையினையும் திருடிச் சென்றுள்ளனர்.

இன்று காலை வீட்டில் பார்த்தபோது திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி. சுரேஸ்த சில்வாவிற்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்களுடன் கைரேகை நிபுணர்களும் விரைந்துடன் ஓமந்தை குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஜ.பி. மகிந்த தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like