வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து சக நண்பர்களுடன் கொண்டாட்டம் : 30000 ரூபா அபராதம்!

கம்பஹா மாவதுர பகுதியில் உள்ள வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்த ஒருவருக்கு ரூபா 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தனது வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சியுள்ள நபருக்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது வீட்டின் சமயலறையில் வைத்து உற்பத்தி செய்து சக நபர்களுடன் கசிப்பினை அருந்தியுள்ள நிலையில், பொலிஸாருக்கு வழங்கப்ட்ட தகவலை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மேலும் குறித்த நபர், கலப்படமற்ற பொருட்கள் பயன்படுத்தாமல் பழங்கள் மாத்திரம் பயன்படுத்தி, கசிப்பு தயாரித்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த்தியபோது, நீதவான் சாந்தனி மீகொ அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

You might also like