கொழும்பில் 6 மாணவர்கள் கடத்தி படுகொலை : இரு கடற்படை அதிகாரிகள் கைது

கொழும்பில் 6 மாணவர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பு மற்றும் திருகோணமலை பகுதிகளில் 28 மாணவர்களும், இரு இளைஞர்களும் கடத்தி படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், குறித்த குற்றத்திற்காக கடற்படை அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு கொழும்பில் வைத்து 6 மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவங்களுக்கு கடற்படையின் குறித்த இரு அதிகாரிகளுமே காரணம் என குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர். இந்நிலையிலேயே, குறித்த இரண்டு அதிகாரிகளையும் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like