யானையின் அட்டகாசம் – உயிருக்கு போராடிய நபர் – யாரும் கண்டுகொள்ளாத மனிதாபிமானம்

தம்புளை பிரதேசத்தில் இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவரின் அவல நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயம் அடைந்த நிலையில், வீதியில் வலியால் துடித்த நிலையில் கிடந்துள்ளார். எனினும் அவரை பார்வையிட்ட எவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கவில்லை.

அந்த வீதியில் வாகனங்களில் சென்ற பலர் அந்த நபரை தங்கள் வாகனத்தில் ஏற்றுவதற்கு விரும்பவில்லை என குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை தம்புளை, பக்கமூன பிரதான வீதியின் 13 மை கல் வீதிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த நபரை, காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது. இந்நிலையில் படுகாயமடைந்து அவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்களின் பின்னர் அந்தப் பகுதியால் பயணித்த தம்புளை உப பொலிஸ் அதிகாரி இவரை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதற்கமைய அந்த வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி, காயமடைந்தவரை வைத்தியசாலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்போது காயமடைந்து வீதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை காப்பாற்ற எவரும் முயற்சிக்காத நிலை குறித்து பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார்.

You might also like