வவுனியாவில் சட்டத்தை மீறும் போக்குவரத்து பொலிசார் (படங்கள் இணைப்பு)

இன்று (03.03.2017) மதியம் இரண்டு மணியளவில் மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக A9 பிரதான வீதியின் மத்தியில் போக்குவரத்து பொலிசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வெளியில் சென்று அவரது நண்பருடன் உரையாடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக வீதியின் மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது.  மத்திய பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக போக்குவரத்து நெருசல் கூடிய இடமாக இருப்பதுடன் பாடசாலை விட்டு மாணவர்கள் செல்லும் நேரமும் கூட.

பொதுமக்களுக்கு ஒரு சட்டம் போக்குவரத்து பொலிசாருக்கு ஒரு சட்டமா? விதி முறைகளை மதிக்க வேண்டிய போக்குவரத்து பொலிசாரே மீறி நடந்தால்.  என்றவாறாக   மக்கள்  பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You might also like