வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்களினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா குடியிருப்பு தாயகம் அலுவலகத்தில் இன்று (30.06.2018) பிற்பகல் 4.00மணியளவில்  வட மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வட மாகாண சபை உறுப்பினர் மருத்தவர் ப. சத்தியலிங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு 40 துவிச்சக்கரவண்டிகள், பலர் பாடசாலைக்கான தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம், 8 ஆடுகள், 2 மாடுகளுக்கான காசோலைகளும் விசேட தேவைக்குட்பட்டவர் ஒருவருக்கான நாற்சக்கரவண்டி என்பன  ரூபா. 9,59,000 ( ஒன்பது இலட்சத்து ஜம்பத்தொன்பதினாயிரம்) ரூபா பெறுமதியான நிதி உதவியில் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

You might also like