வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் இளம் தலை முறையினர் கைகளில்

வவுனியா வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம் பல்வேறு சலசலப்புடன் இன்று இளம் சமூகத்தினர் தெரிவு செய்யப்பட்டு பதவிகளும் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரான வவுனியா மாவட்டத்தை மேலும் சிறப்பான வாடிக்கையாளர் சேவை நகராக மாற்றும் திட்டத்துடன் இன்று (01.07.2018) காலை 10.00 மணியளவில் வவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள வாடி வீடு மண்டபத்தில் ஆரம்பமாகிய பொதுகூட்டம் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் படி சங்கத்தினுடைய புதிய நிர்வாகத்தின் (தலைவர்) சுஜன் சண்முகராஜா, (செயலாளர்) ஆறுமுகம் அம்பிகைபாலன், (பொருளாளர்) நடராசா சுந்தரதாசன் ஆகியோர் இந் நிர்வாக சபையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்தாவாறே இளம் தலைமுறையினரையும் புதிய நிர்வாகத்திற்குள் உள்வாங்கி வர்த்தகர் சங்கத்தின் நம்பகரமான செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு அத்திவாரம் இட்டுள்ளதாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வர்த்தக பிரமுகர்கள் சிலர் கருத்துக்களை வெளியிட்டனர்.

இக் கூட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் செ.மயுரன், வவுனியா பிரதேச செயலாளர் , வவுனியா நகரசபை தலைவர் , உப தலைவர், உறுப்பினர்கள் , வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் , வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் , வவுனியா தனியார் பேரூந்து சங்க தலைவர் ,  வர்த்தகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like