புதுக்குடியிருப்பு காணி இன்று மக்களிடம் கையளிப்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் கடந்த 8 வருடங்களாக படையினரின்கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 7.75ஏக்கர் நிலம் இன்று காலை காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

புதுக்குடியிருப்பு நகரை அண்டியுள்ள பொன்னம்பலம் வைத்தியசாலை காணி மற்றும் அதனை சூழவுள்ள காணிகள் உள்ளடங்கலாக சுமார் 19 ஏக்கர் நிலத்தை படையினர் போருக்கு பின்னர்அபகரித்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த தை மாதம் 3ம் திகதி தொடக்கம் தமது நிலத்தை தம்மிடமே வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு மக்கள் இன்றுடன்31 நாட்களாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோருக்கிடையில் நடைபெற்றபேச்சுவார்த்தையில் மேற்படி காணிகளை விடுவிப்பதற்கான இணக்கம் காணப்பட்டிருந்தது.

தொடர்ந்து கடந்த 28ம் திகதி மேற்படி காணியில் முதல் கட்டமாக 7.75 ஏக்கர் காணியைநாளை விடுவிப்பதற்கும், 2ம் கட்டமாக 10 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு 3 மாதங்கள்தேவை எனவும், 3ம் கட்டமாக பொன்னம்பலம் வைத்தியசாலை மற்றும் அது அமைந்துள்ள காணிஆகியவற்றை 6 மாதங்களில் விடுவிப்பதாக இணக்கம் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைய இன்று 20 குடும்பங்களுக்கு சொந்தமான 7.75 ஏக்கர் நிலம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை படையினர் இணக்கம் தெரிவித்தமைக்கு அமைவாக காணிகள்விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டிருக்கும் மக்கள் அரசாங்கம்காலத்தை இழுத்தடிக்க நினைத்தால் தொடர்ந்தும் போராட்டம் நடத்துவோம். என மக்கள்கூறியுள்ளனர்.

You might also like