பாடசாலை மாணவர்கள் குழுக்களாக மோதல்! 50 பேரை கைது செய்த பொலிஸ்

பாதுக்க பிரதேச பாடசலை மாணவர்கள் மற்றும் பாணந்துறை பிரதேச மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்திற்கு தொடர்புடைய பாணந்துறை பாடசாலையின் பழைய மாணவர்கள் குழுவொன்று டிபென்டர் வாகனம் மற்றும் லொரி ஒன்றில் பாதுகாப்பு பிரதேசத்திற்கு வருகைத்தந்து, பாதுக்க பிரதேச மாணவர்களுடன் மோதல் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் பாதுக்க பிரதேச பாடசாலையின் அதிபர் பொலிஸாரிடம் மேற்கொண்ட முறைபாட்டிற்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை பிரதேச மாணவர்கள் 30 பேர் மற்றும் அந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் 20 பேரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுக்க பிரதேச பாடசாலையின் மாணவர்கள் விளையாட்டு பயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் பாணந்துறை பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக பாதுகாக்க பிரதேச பாடசாலைக்கு நுழைந்தமையே இந்த மோதல் ஏற்பட காரணம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You might also like