தந்தைக்கு பதிலாக மகனை கைது செய்த பொலிஸார் !

பொலிஸ் விசாரணைகளுக்கு தேடப்பட்டு வந்த சந்தேக நபருக்கு பதிலாக சந்தேக நபரின் மகனான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொரளை பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவினரால் இந்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தலையிட்டு மாணவனை மீட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சந்தேக நபர் சார்பில் கைது செய்யப்பட்ட மாணவன் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10ம் வகுப்பில் கல்வி கற்று வருபவர் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் தன்னை தாக்கியதாக கூறியுள்ள மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

You might also like