வவுனியாவில்  9ஆவது நாளாக காணாமல் போனஉறவுகள் உண்ணாவிரத போராட்டத்தில்

வவுனியாவில் கடந்த 9ஆவது நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமற்போன உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்பின் பிரதிநிதிகளின் ஆதரவின்றித் தொடர்ந்து இன்று (04.03.2017) 9ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது

இது குறித்து பொது அமைப்பின் பிரதிநிதிகளிடம் தொடர்பு கொண்டபோது,

காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு எமது முழுமையான ஆதரவினை வழங்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறித்த போராட்டத்தில் தொடர்பு இல்லாமல் இருவர் இருந்து செயற்பட்டு வருவதால் ஆதரவினை வழங்க முடியவில்லை என்றும் குறித்த இருவரும் வெளியேறினால் அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் ஆகியவற்றை இணைத்தக் கொண்டு காணாமற்போன உறவுகளின் போராட்டத்தினை மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like