‘ஜனாதிபதி ஏமாற்றிவிட்டார்’ நடுவீதியில் அமர்ந்த வடமாகாண சபை உறுப்பினரும் மக்களும்

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் வீதியில்அமர்ந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை ஜனாதிபதியின் வருகையை ஈர்க்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

ஆனால் வடக்கு ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் முடிவடைந்ததும் ஜனாதிபதி பின்வாசல் வழியாக சென்றுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தம்மை பார்க்காமல் ஜனாதிபதி சென்றுவிட்டார், எம்மை ஏமாற்றி விட்டார் என்றும் பலத்த கோசங்களை எழுப்பிக்கொண்டு சிவாஜிலிங்கம் உட்பட மக்கள் அனைவரும் நடுவீதியில் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.

You might also like