அடிப்படை வசதிகள் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் போராட்டம்

கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் கோரி இன்று (சனிக்கிழமை) கவனஈர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

காலை 9 மணிதொடக்கம் 11 மணிவரை இடம்பெற்ற குறித்த போட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்திரளானோர்கள் கலந்துக்கொண்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு முதல் குடியிருப்பு காணிக்கான ஆவணம், நிரந்தர வீட்டுத் திட்டம் ஆகியன இதுவைர அரசிடமிருந்து கிடைக்காததை போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் சுட்டிக்காட்டினர்.

 

You might also like