வவுனியாவில் 6 முச்சக்கரவண்டியில் திருட முயன்ற நபர் கைது

வவுனியா பொது வைத்திசாலைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 முச்சக்கரவண்டிகளில் திருடுவதற்கு முயன்ற நபர் ஒருவரை பொலிசார் சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி முன்பக்கத்திலுள்ள ஆவணங்கள் வைக்கும் பகுதியைத் திறந்து அதற்குள் இருந்த பொருட்களைத் திருடுவதற்கு முயன்ற 29 வயதுடைய சிலாவத்துறையைச் சேர்ந்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர்.

வேறு பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச்  சம்பவங்களுடன் சந்தேகநபர் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You might also like