வவுனியாவில் சமூர்த்தி ஊழல் குற்றச்சாட்டில் ஜந்து உத்தியோகத்தர்கள் பணிநீக்கம்

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு பணியில் இணைந்து கொண்டவர்கள் அப் பகுதியில் பயணாளிகளுக்கு வழங்கப்பட்ட பணத்தில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு தலைமை அலுவலகம் குறித்த 5பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை உறுதிப்படுத்தியதுடன் அவர்களை சமுர்த்தி பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் இடம்பெற்ற விசாரணைகளின் போது சுமார் 10 பேர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது 5 பேருக்கு எதிராகவே குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 2014, 2015ஆகிய காலப்பகுதிகளில் பயணாளிகளுக்கு வழங்கப்பட்ட நிதியிலிருந்து மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குறித்த 5பேருக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கிலிருந்து உள்ளக இடமாற்றம் பெற்றுள்ள பலர் பல பிரதேசங்களில் தற்போது பணியாற்றி வருகின்றார்கள். இன்று வரையில் அவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் தற்போது பணிநீக்கம் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் மாவட்ட செயலாளருக்கு இது குறித்து அறிவிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த 5 உத்தியோகத்தர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுஅவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.

You might also like