வவுனியா குருமன்காட்டில் மூன்று வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு

வவுனியா குருமன்காடு சந்தி தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் இன்று (11.07.2018) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பானக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமாடுச்சந்தி தனியார் வங்கிக்கு அருகேயுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் ( பலசரக்கு பொருட்கள் விற்பனை நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத்தொடர்பகம்) இன்று காலை வர்த்தக நடவடிக்கைக்காக திறக்கப்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் மேற்பகுதி (சீட்) கழற்றப்பட்டு கழவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like