15 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 61 வயது முதியவர் கைது

15 வயதான பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா ஹபுகஸ்தென்ன தோட்டப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 61 வயதான முதியவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த மாணவியின் நடத்தையில் சந்தேகம்கொண்ட பாடசாலை அதிபர், மாணவியிடம் விசாரித்த போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து, அந்த மாணவி வைத்திய பரிசோதனைகளுக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like