வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு சிறுவர்களை இலக்கு வைக்கும் சாராயம் சிகரெட் கம்பனிகளின் தந்திரோபயங்கள் தொடர்பான கருத்தரங்கு

சிறுவர்களை இலக்கு வைக்கும் சாராயம் சிகரெட் கம்பனிகளின் தந்திரோபயங்களையும் , மாணவர்கள் மத்தியில் சிகரெட் பாவனை என்பது முட்டாள்தனத்தின் அடையாளம் என்கின்ற விடயத்தை தெளிவுபடுத்தும் முகமாக வவுனியா திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையில் நேற்றையதினம் விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது.

நிகழ்வின் வளவாளராக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர் அருளானந் இணைந்திருந்ததோடு சிகரெட் பாவனையால் உதடு கறுத்தல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல் ,பாலியல் பலவீனமடையதல் , அசிங்கமான முகத்தோற்றம் ஏற்படல் போன்ற தகவல்கள் மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

You might also like