மாணவன் போட்ட குண்டால் வெடித்துச் சிதறியது யாழ்! – அதிர்ச்சிக் காணொளி இணைப்பு

இதனை கேட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள், இனி நாக்கை பிடுங்கி சாகலாம். ஏன் என்றால் ஈழத்து மாணவர்கள் விழித்துக்கொண்டார்கள்.

கொழும்பு இந்துக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரியோடு இணைந்து “சொல்லாடல்” என்னும் நிகழ்வை நடத்தியது. அதில் முக்கிய கருப்பொருளாக, தமிழ் தேசிய தலைமை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. அங்கே பேசிய மாணவர்கள், புலிகள் அன்று யாரை காட்டினார்களோ. அவர்களுக்கு தான் இன்றும் மக்கள் வாக்களித்து வருவதாக கூறிய அதேவேளை. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை சுத்தமாக ஏமாற்றி வருகிறது என்பது படம் போட்டு காட்ட தவறவில்லை.

இதில் சுமந்திரணை ஒரு மாணவர் வறுத்து எடுத்துவிட்டார். சுமந்திரனையும் சம்பந்தரையும் மாணவர்கள் போட்டு தாக்கிய விதத்தில் ஒருந்து ஒன்று புரிகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் நீண்ட நாட்களுக்கு அரசியல் செய்ய முடியாது என்பது புலப்படுகிறது. இச்செய்தியை நாம் பதிவேற்றம் செய்யும் இதேவேளை திருகோணமலையில் இருந்து ஊர்ஜிதமற்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ராவணன் ஆண்ட இடம், இதிகாசத்திலும் புராணங்களிலும் குறிப்பிடப்படும் இடமான திருகோணமலையில் உள்ள, கன்னியா வென்னீர் ஊற்றுப் பகுதியை புனித பெளத்த ஸ்தலமாக சிங்களவர் அறிவித்துள்ளார்கள் என்று.

அப்படி என்றால் திருகோணமலை MP சம்பந்தர் என்ன பிடுங்கிக்கொண்டு இருக்கிறார் ?

You might also like