வவுனியாவில் ஜனாதிபதி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததான முகாம்

வவுனியாவில் ஜனாதிபதி மற்றும் திரி சாரணர்களின் ஒழுங்கமைப்பில் சாரணர் அமைப்பின் ஸ்தாபகர் பேடன் பவல் பிரபு அவர்களின் 160 ஆவது பிறந்த தினத்தினை நினைவு கூரும் முகமாக இன்றையதினம் (05) காலை 9 மணி முதல் வ/இலங்கை திருச்சபை தமிழ் மகா வித்தியாலயத்தில் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு த.நிகேதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வின் அதிதிகளாக  சாரண  மாவட்ட ஆணையாளர் எம்.எஸ்.பத்மநாதன் அவர்களுடன் உதவி மாவட்ட ஆணையாளர்களான திரு கு.கமலகுமார் , திரு வ.ஜதீஸ்கரன், உதவி மாவட்ட ஆணையாளரும் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளருமான திரு சு.காண்டீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வில்  ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் உப தலைவர் திரு அ.அனந்தன், ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் பொருளாளரும், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு ஸ்ரீ.கேசவன் ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் உப செயலாளர் திரு வ.பிரதீபன் மற்றும் உறுப்பினர்களான அ.அனோஜன், வி.சஜீவ்நாத் ,  திரு பி.கேர்சோன் ,திரி சாரணன் திரு கு.நிதர்சன், மற்றும் ஊடகவியலாளர்கள்,  சாரணர்களுடன் பெருமளவான இளைஞர்களும் இன்றைய இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இன்றைய இரத்ததான நிகழ்விற்கு சரவணாஸ் புடவையகம், சபரி அச்சகம், திருப்பதி உணவகம் என்பன அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது

 

 

You might also like