வவுனியாவில் தேங்காய் பிடிங்குவது போல் சென்று திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் கைது

வவுனியா கற்குழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீட்டின் கதவினையுடைத்து நகைகள், பணம் , தொலைபேசி என்பவற்றை திருடிச்சென்ற நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா கற்குழி பகுதியில் அமைந்துள்ள ஆலயமோன்றில் திருவிழா இடம்பெற்றுள்ளது. திருவிழாவிற்கு வீட்டார் சென்றிருந்த சமயத்தில் அவ் வீட்டின் கதவினையுடைத்து கைத்தொலைபேசி, பணம் என்பன திருடப்பட்டுள்ளது.

திருவிழா முடிவடைந்த பின்னர் வீட்டார் வீடு திரும்பிய சமயத்தில் கதவுடைத்து திருடப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். அதனையடுத்து வீட்டார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைபாட்டினை மேற்கொண்டனர்.

முறைப்பாட்டினையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் , மானிப்பாய் பகுதியினை சேர்ந்த 26வயதுடைய ( ஒரு பிள்ளையின் தந்தை) நபரோருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வீடுகளுக்கு சென்று தேங்காய் பிடிங்கிக் கொடுக்கும் வகையில் வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பொருட்களை பார்வையிட்டதன் பின்னர் பிரிதோரு தினத்தில் வந்து களவாடி செல்வதாகவும் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு , திருட்டுச் சம்பவ குற்றச்சாட்டில் பல தடவைகள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவரேனவும் தற்போது பம்பைமடு பகுதியில் வசித்து வந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக  வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 

You might also like