கிளிநொச்சியில் இனம் தெரியாத நபரினால கத்திக்குத்துக்கு இலக்கான பெண்ணை பார்வையிட்டார் : சிறிதரன்

கிளிநொச்சியில் இனம் தெரியாத இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயோதிப பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டுள்ளார்.

குறித்த பெண்மனியை சிறீதரன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த வெள்ளிக்கிழமை சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வரன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிப பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கத்தியால் குத்தியிருந்தார்.

இதயைடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறித்த பெண்ணை நேரில் சென்று சந்தித்திருந்தார்.

இதன்போது, பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினருடன் உரையாடுகையில்,

இராணுவ சிப்பாயே தன்னை கத்தியினால் குத்தியதாக கூறியுள்ளதுடன், சாந்தபுரம் கிராமத்தை அண்டியுள்ள காட்டு பகுதியில் படையினர் காட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்துவருவதாகவும், அந்த விடயம் வெளியே தெரிந்த நிலையில் அந்த விடயத்தை ஆடு மேய்ப்பதற்காக செல்லும் நானே சொன்னதாக கூறப்படுவதன் அடிப்படையிலேயே இராணுவ சிப்பாய் தன்னை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

மேலும் தன்னை குத்திய இராணுவ சிப்பாய் தன்னிடம் 5 தடவைகளுக்கும் மேல் இராணுவ சீருடையில் காட்டுக்குள் நின்று வெற்றிலை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளதுடன், குறித்த இராணுவ சிப்பாயை தன்னால் அடையாளம் காட்ட இயலும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவதானமாக இருக்குமாறு குறித்த வயோதிக பெண்மணியை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு கொண்டுள்ளதுடன் விபரங்களையும் பெற்று கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தை நேரில் பார்iயிட்டும் உள்ளார்.

You might also like