குவைத்தில் இலங்கைப் பெண் கொலை! ‘நானே தீ மூட்டினேன்’ இலங்கையர் வாக்குமூலம்

குவைத் நாட்டில் இலங்கைப் பெண் ஒருவரை இலங்கை இளைஞர் ஒருவர் தீ மூட்டி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குவைட் சிட்டி நகரின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த வாரம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்த நாட்டு பொலிஸார் குறித்த இலங்கையரை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தின் போது கடும் தீக்காயத்திற்கு உள்ளான இலங்கைப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு பொலிஸார், குறித்த பகுதியில் பணிப்புரிந்த இலங்கை இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

எனினும், குறித்த பெண் தீ மூட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும், அவரை காப்பற்றச் சென்ற தமக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

எவ்வாறாயினும், பின்னர் தானே குறித்த பெண்ணுக்கு தீ மூட்டியதாக இளைஞன் வாக்கு மூலம் அளித்துள்ளதாக, த அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் அந்த நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like