காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பரந்தன் மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றைய தினமும் தொடர்கின்றது.

இந்நிலையில் குறித்த உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பரந்தன் மக்கள் ஒன்றிணைந்து அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கடந்த 20-02-2017 திங்கள் காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

You might also like