கிளிநொச்சியில் கலைகதம்பம் 2017 நிகழ்வு (படங்கள் இணைப்பு)

யாழ் இந்திய துணைத்தூதரகமும் கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றமும் இணைந்து நடாத்திய கலைகதம்பம் 2017 நிகழ்வு இன்று கிளிநொச்சி திருநகர் கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில்  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று04-03-2017 பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமான கலைகதம்பம்  இசை நடன சங்கமம் நிகழ்வில் விருந்தினர்கள் தமிழ் இன்னிய அணியிசையுடன் அழைத்து வரபட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன

பாடசாலை மாணவர்கள்,கலாமன்ற கலைஞர்கள் உள்ளிட்ட பலரின்  சிறந்த இசை நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. வருடந்தோறும் கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தினரால் நடத்தப்படுகின்ற நிகழ்வானது இம் முறை  இந்திய துணைத் தூதரகமும் இணைந்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like