வவுனியாவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைப்பு

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத வீதியில் இன்று (18.07.2018) இரவு 8.15 மணியளவில் துவிச்சக்கரவண்டியினை திருட முற்பட்ட நபர் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

வவுனியா வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மரக்கறி வியாபார நிலையத்திற்கு ஒருவர் தனது துவிச்சக்கரவண்டியினை வீதியில் தரித்து விட்டு சென்றுள்ளார்.

இதன் போது அவ் துவிச்சக்கரவண்டியினை 25வயது மதிக்கத்தக்க இளைஞரோருவர் அபகரித்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த நபரோருவர் இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளார். இதன் போது குறித்த இளைஞனை அவ்விடத்தில் நின்ற நபர்கள் நையப்புடைத்துள்ளார்கள்.

பின்னர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இளைஞன் வவுனியா பொலிஸாரினாள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

You might also like