டெங்கு நுளம்பை ஒழிக்க வவுனியா பொது சுகாதார பணிமனையினரின் அதிரடி நடவடிக்கை

வேப்பங்குளம், பட்டகாடு பகுதியில் டெங்கு நுளம்பை ஒழிக்க விசேட நடவடிக்கை இன்று (05.03.2017) மேற்கொள்ளப்பட்டுள்ளளது.

நெளுக்குளம் பொலிஸாரும், வவுனியா பொது சுகாதார பணிமனையினரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை அழிக்கும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீடு வீடாகச் சென்று மக்களுக்கு டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் அமைந்திருந்த பொதுமக்களின் வீடுகள் என்பவற்றில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நுளம்பு பெரும் இடங்களும் அழிக்கப்பட்டன.
மேலும், டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்வில் வைத்தியர் லவன், பொது சுகாதார பரிசோதகர் வாகீசன், நெளுக்குளம் பொலிஸ் உத்தியோகஸ்தர், கிராம சேவையாளர் தவராசா, சமுதாய பாதுகாப்பு குழு தலைவர் நாகூர்கனி ஸாபி, அதன் பொருளாளர் ஜெமீல் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் A.R.M.லறீப் , சமுதாய பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

நேற்றையதினம் (04.03.2017) பட்டாணிச்சூர் , வேப்பங்குளம் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like