வவுனியாவில் உயிர்வாழ உதவிகோரும் மூன்று பிள்ளைகளின் தந்தை

சிறுநீராக செயலிழந்த நிலையில் தான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், தனது மருத்துவ செலவிற்காக தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு வவுனியாவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் மக்களிடம் உதவி கோரியுள்ளார்.

வவுனியா – செட்டிகுளம், துடைரிக்குளம், வீதியில் வசிக்கும் சூசை ஜேசுராசா (றொபின்) என்பவருக்கு அவசரமாக சிறுநீரகம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், கடந்த 2008ஆம் ஆண்டு சிறுநீரகம் நோய் ஏற்பட்டுள்ளதுடன், 2016ம் ஆண்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்துள்ளது.

வாரத்தில் இரண்டு நாட்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் இரத்தம் சுத்திகரித்து வருகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது பிள்ளைகளை படிப்பிக்கவும், எனது வைத்திய செலவுகளுக்கும் பொருளாதாரம் போதாமையாக உள்ளது.

மேலும், எனது நிலைமையை புரிந்து எனக்கு சிறுநீரகம் தானம் செய்யவும் அல்லது மாற்று சிறுநீரகம் சிகிச்சைக்கு தேவையான பண உதவிகள் செய்யவும் அன்பாக கேட்டுக்கொள்கிறேன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புகளுக்கு :- 077 5872262 / 025 5723751

வங்கி கணக்கு :- மக்கள் வங்கி
பெயர் :-சூசையேசுராசா
கணக்கு இலக்கம் :- 356-2-001-3-1-1605392

You might also like