பல போர்க்களம் கண்ட வட்டுவாகல் பாலத்தின் தற்போதைய நிலை

கடந்த காலங்களில் பல போர்க்களங்களை சந்தித்த வட்டுவாகல் பாலம் இன்னமும் புனரமைப்பு செய்யதாத நிலையில் ஒரு வழி பாதையாக காணப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து சாரதிகள் பெரும் இடையூறுகளை சந்தித்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் அபிவிருத்தி பணிகள் இடம் பெற்றுவரும் நிலையில் குறித்த பாலம் கைவிடப்படப்பட்ட நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதே வேளை A35 மணற்குடியிருப்பு பாலம் சேதமடைந்த நிலையில் குறித்த வீதியால் வாகனங்கள் செல்ல தடை விதித்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டன.

இந்த நிலையில் மாற்று வழியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் முல்லைத்தீவை சென்றடைவதற்குள் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பாலங்களை புனரமைப்பு செய்து சீரான போக்குவரத்தினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு வாகன வரி செலுத்தும் வாகன சாரதிகள் உரிமையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்

You might also like