புலிகளின் துப்பாக்கிகளே சிறைச்சாலை பேருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது

தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தற்போது பாதாள உலக குழுவினரிடம் இருப்பதாக பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மகரகம பிரதேசத்தில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

சிறைச்சாலை பேருந்து மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக குழுக்களை அடக்க எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக எடுக்க வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

You might also like