வவுனியா தெற்கு பிரதேச சபை தலைவரின் அதிரடி நடவடிக்கை :குவியும் பாராட்டுக்கள்

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களுக்கு பொதுமக்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து உடனடியாக தடுத்து நிறுத்தினார்.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கூமாங்குளம் , நெளுக்குளம் , தாஸ்கோட்டம் பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்படுவதாக கடந்த சில தினங்களாக மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) அவர்களின் உத்தரவின் பேரின் இன்று (20.07.2018) காலை நெளுக்குளம் , தாஸ்கோட்டம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிட வேலைகளை வவுனியா தெற்கு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இச் செயற்பாடு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பொதுமக்கள் அனுமதியினை பெற்று கட்டிடங்கள் , சுற்றுமதிகள் என்பவற்றினை அமைக்குமாறும் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களின் உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) தெரிவித்தார்.

You might also like