பூநகரி பள்ளிக்குடா சுன்னாவில் அ.த.க. பாடசாலை பெயர் மாற்றம்

கிளிநொச்சி, பூநகரி பள்ளிக்குடாவில் இயங்கிய சுன்னாவில் அ.த.க. பாடசாலையின் பெயர், “பள்ளிக்குடா தமிழ் வித்தியாலயம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பூநகரிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம் தெரிவித்தார்.

பள்ளிக்குடாவில் பாடசாலை இல்லாததன் காரணமாக, சுன்னாவில் பாடசாலை பள்ளிக்குடாவில் இயங்கிய நிலையில், இப்பாடசாலையின் பெயரினை மாற்றுமாறு பெற்றோர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், பூநகரிக் கல்விக் கோட்டமும் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையும் எடுத்த முயற்சி காரணமாக, சுன்னாவில் பாடசாலையின் பெயர் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

பள்ளிக்குடா மக்கள், சுன்னாவில் கிராமத்தில் இடம்பெயர்ந்து இருந்த காலத்தில் சுன்னாவில் பாடசாலை உருவாக்கப்பட்டது.

You might also like