பூநகரி, பள்ளிக்குடா கிராமத்துக்கு பஸ் சேவை எப்போது?

கிளிநொச்சி, பூநகரி, பள்ளிக்குடா கிராமத்துக்கு பஸ் சேவையினை மாணவர்களின் நலன்கருதி நடாத்துமாறு அப்பகுதி பெற்றோர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் இருந்து பூநகரி வாடியடி வரை நடைபெறும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ், பள்ளிக்குடா கிராமத்துக்கு  வந்து, பள்ளிக்குடாவில் இருந்து செம்மங்குன்று சென்று திரும்புவதன் மூலம், பூநகரி மத்திய கல்லூரிக்குச் சென்று வரும் மாணவர்கள் பெரும் நன்மை அடைவார்கள்.

பள்ளிக்குடா, நெடுங்குளம், மணற்காடு, நித்தியதரைவெளி, சேவியர்தோட்டம் ஆகிய கிராமங்களின் 500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பூநகரி வாடியடிச் சந்திக்கு வருகை தருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பஸ் சேவையினை நடாத்துவதன் மூலம் பூநகரி மத்திய கல்லூரி, பூநகரிப் பிரதேச செயலகம், பூநகரி மருத்துவமனை ஆகியவற்றிற்குச் செல்லும் மாணவர்களும் மக்களும் பெரும் நன்மை அடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like