வவுனியா நூலக வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

வவுனியா நகரசபைக்கு முன்பாக இன்று (06.03.2017) பிற்பகல் முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து பற்றி மேலும் தெரிய வருவதாவது,
பூங்கா வீதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டி ரெலிகொம் வீதிக்கு திரும்ப முற்பட்ட போது வவுனியாவில் இருந்து பூங்கா வீதிக்கு வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் நேராக மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 30,32 வயதுடைய இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் அதி வேகமாக பயணித்ததாலேயே இவ் விபத்து இடம்பெற்றதாக இவ் விபத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.