வவுனியாவில் பாரிய பேரூந்து விபத்து : 19 நபர்கள் வவுனியா வைத்தியசாலையில்

வவுனியா பூனாவை பகுதியில் இன்று (25.07.2018) அதிகாலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் 19 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டினையிழந்து பூனாவை பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமிற்கு அருகேயுள்ள மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like